பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குேைசகரப் பெருமான் 2?? அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்கினைந்தே அழுங்குழவி: அதுவேபோன்று இருந்தேனே (1) |அரிசினம் . மிக்க சினம்; என்று முறையிடுகின்றார். சினத்தினால் ஒரு தாய் தான் பெற்ற குழவியை ஒரு சமயம் வெறுத்துத் தள்ளினாலும், தாயின் கருணையையே கருதி குழந்தை அழுது அழுது அவள் கருணைக்குப் பாத்திரமாகின்றது. அழுதான் உன்னைப் பெறலாமே ? என்றபடி அழுது அடிபடைத்தி மணிவாசகப் பெருமானைப் போலவே, கண்களில் நீர் மல்க அழவேண்டும். இந்நிலையில் பரமான்மாவுக்குக் சீவான்மாவுக்கும் உள்ள உறவு முறை தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு முறை போன்றது என்பதை அறிகின்றோம். இந்நிலையில் குறுந்தொகைப் பாடல் ஒன்று நினை விற்கு வருகின்றது. இதனையும் உங்கள் முன் வைக் கின்றேன். ஊதை துற்றும் உறவுநீர்ச் சேர்ப்ப தாய்உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு) அன்னாய்!” என்னும் குழவிபோல இன்னா செயினும் இனிதுதலை அளிப்பினும் கின்வரைப் பினள் என் தோழி தன்னுறு விழுமம் களைளுரோ இலளே.' |ஊதை - குளிர்காற்று: உறவுநீர்-வன்மையையுடைய, உடன்று மாறுபட்டு; அலைக்கும் . வ ரு ந் தி ய பொழுது; தலை அளித்தல் - அன்பு செய்தல்; வரைப்பினள் . புரக்கப்படும் எல்லைக்கு உட் 30. திருவா. திருச்சதகம்.90 31. குறுந் 397