பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

ஆழ்வார்களின் ஆரா அமுது


3. காதலியைக் கைபிடித்தல் வரை நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆண்டாள் கனவில் கண்டு அதுபவித்தவற்றை அப்படியே தன் உயிர்த்தோழிக்குச் சொல்லுவதாக அமைந்தது *திருமணக் கனவு’ என்ற ஆறாம் திருமொழி. வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து காரணன் கம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கணாக்கண்டேன், தோழி கான் (1) என்பது முதற்பாசுரம். நாரண நம்பி தன்னை மணம் புணருவதாக நிச்சயித்து ஆயிரக்கணக்கான யானைகள் சூழ்ந்து ஊரை வலம் வரவும், நகர் முழுவதும் மக்கள் பூரணகும்பங்களை வைத்து வரவேற்கவும் தோரணங்கள் நாட்டியிருக்கவும் கனாக்கண்டதாகத் தோழியிடம் கூறு கின்றாள். கண்ணபிரான் அலங்காரப்பந்தரின் கீழ் எழுந்தருளியிருக்கவும் (2), துர்க்கை என்ற நாத்தனார் தனக்குக் கூறைப் புடவை உடுத்த நறுமணம் மிக்க மலர் சூட்டவும் (3), அந்தணர்கள் காப்புநாண் (கங்கணம்) கட்டவும் (4), மதுரையார் மன்னன் பாதுகை களைச் சாத்திக்கொண்டு பூமியதிர வரவும் (5), தன்னைக் கைத்தலம் பற்றவும் (6), தீவலம் செய்யவும் (7), அம்மி மிதிக்கவும் (8), கண்ணன் கையின் மேல் தன்கையை வைத்துப் பொரிகளை அள்ளித்தெளிக்கவும்(லாஜஹோமம்) (9), மங்கல வீதி வலம் வந்து மஞ்சனம் ஆட்டவும் (10) கனவு கண்டதாகக் கூறுகின்றாள். திருமஞ்சனம் ஆட்டுமளவும் கனாக் கண்டதாகச் சொல்லப்பட்டிருந்தாலும் அடுத்தபடியாக புணர்ச்சியும் கனவிலேயே நடைபெற்றதாகக் கொள்ள வேண்டும். இந்நிலையில் கனவு கலைகின்றது. மெய்யாகவே கண்ண பிரானுடைய திருவாயமுதத்தை நாடோறும் இடைவிடாது. பருகும் திருச்சங்காழ்வானை நோக்கி வினவுகின்றாள். {பதிகம்.7).