பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.நாடும் மக்களும் நலம் பெற

98


"ஓங்கியுலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடை நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்,
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்”

என்று கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று தன் பிறப்பால் ஊருக்குப் பெருமை சேர்த்த ஆண்டாள் பாடியுள்ளார். மேலும்,

" ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்த வளர
தரிக்கிலானாகி த்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்கச் செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”

எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்து மிகிழ்ச்சியடைவோம் என்று நெடுமாலை நினைத்துப் பாடுகிறார்.

குலசேகராழ்வார் பாடியது பெருமாள் திருமொழியாகும். அவர் தனது அரச பதவியையும் துறந்து விட்டு திருமால் சேவைக்கு