பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

99


வந்தவர். வானகமும், அமரர்களும் மண்ணும் மண்ணில் வாழும் மனிதர்களும் உய்ய வேண்டும். நல்வாழ்வு பெற வேண்டும் என்றும் துன்ப துயரங்கள் அகல வேண்டும் என்றும் எந்தவிதமான சோர்வும் இல்லாமல் சுகம் வளர வேண்டும் என்றெல்லாம் பாடுகிறார்.

“வன்பெருவானகமுய்ய அமரர் உய்ய
மண்ணுய்ய மண்ணுலகில் மணிசர் உய்ய
துன்பமிகு துயரகல அயர் வொன்றில்லாச்
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும
இசைந்துடனே யென்று கொலோவிருக்கு நாளே!”

என்று பாடுகிறார்.

திருமழிசைப்பிரான் பாடியுள்ள திருச்சந்த விருத்தத்தில் நன்றாகப் புரிந்து கொண்டு தெளிவாகத் தெரிந்து கொண்டு வாமனனை வணங்கினால் ஞானமும் செல்வமும் கிட்டும், தீவினைகள் நீங்கும் என்று கூறுகிறார். மனிதனுக்கு அறிவும் செல்வமும் கிட்ட வேண்டும் என்பது ஆழ்வாரின் வேண்டுதலாகும்.

அறிந்தறிந்து வாமனன்
அடியினை வணங்கினால்
செறிந்தெழுந்த ஞானமோடு
செல்வமும் சிறந்திடும்
மறிந்தெழுந்த தெண்டிரையுள்
மன்னுமாலை வாழ்த்தினால்