பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.நாடும் மக்களும் நலம் பெற

100


பறிந்தெழுந்து தீவினைகள்
பற்றறுதல் பான்மையே

என்று ஆழ்வார் பாடுகிறார்

உயிரும் உறக்கமும், உணர்வும், ஐம்புலனும் அதனால் அறியப்படும் அறிவுத்தெளிவும் வானோடு மண்ணும் கடலும் அவைகளின் பயனும் நானும் நீயும் எல்லாம் நீயே என்று பாடுகிறார் திருமழிசைப்பிரான். இது ஆழ்ந்த தத்துவக் கருத்துக்கள் நிறைந்ததாகும்.

ஊனின் மேய ஆவிநீ
உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ
அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ
வளங் கடற்பயனும் நீ
யானும் நீய தன்றி எம்பி
ரானும் நீ இராமனே!

என்பது ஆழ்வாரின் பாசுர வரிகள்.

மனித வாழ்க்கையின் காலத்தைப் பொதுவாக நூறாண்டு காலம் என்று நூல்களெல்லாம் கூறுகின்றன. ஆயினும் நூறாண்டு காலம் வாழ்பவர்கள் ஒரு சிலரே. நூறாண்டு காலம் ஒருவர் வாழ்ந்து விட்டால் அது ஒரு முழு வாழ்க்கையாகக் கருதப் படுகிறது. அப்படி நூறாண்டு காலம் ஒருவர் வாழ்வு பெற்றாலும் அந்தக் கணக்குப்படி எடுத்துக் கொண்டாலும் அதில் பாதி காலம் உறங்கிக் போகிறோம். முதல் பதினைந்து ஆண்டுகள் பேதையாய் பாலகனாய்