பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

8


தனித்தன்மையான கருத்துக்களும் இந்த நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

ஆழ்வார்களும் சிறந்த கவிஞர்களாவர். அவர்களுடைய பக்தியின் ஆழத்தையும், கவியுள்ளத்தின் ஆழத்தையும் காண்பது அரிது. அதுபோல் பாரதி என்னும் மகாகவியின் கவியுள்ளத்தின் ஆழத்தையும் காண்பது கடினம். ஆழ்வார்களின் பாடல்களையும், பாரதியின் பாடல்களையும் படிக்கும் போதும் படிக்கக் கேட்கும் போதும் அக்கவிதைகளின் பொருளையும் கருத்தாழத்தையும் புரிந்து கொள்ள முயலும் போதும், ஆழ்வார்களுக்கும், பாரதிக்கும் உள்ள பல ஒற்றுமைகள் புலப்படுகின்றன. அதை அறிந்து கொள்ளும் முயற்சியில் இந்த நூல் எழுத முயற்சித்தேன். அந்த முயற்சியில் எந்த அளவில் வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை மற்றவர்கள் தான் கூறவேண்டும்.

ஆழ்வார்களும் பாரதியும் என்னும் இந்த நூலை எழுதுவதற்கு என்னுடைய பல நண்பர்களும் ஊக்க மூட்டினார்கள். ஆழ்வார்களும், பாரதியும் நமது பெருமைக்குரியவர்கள். அவர்கள் எழுதியுள்ள தெய்வ பக்திப் பாடல்களை, தேச பக்திப் பாடல்களை, மானுட அபிமானப்பாடல்களை, உலக நன்மைக் கான பாடல்களை நாம் படிக்க வேண்டும். திரும்பத்திரும்பப் பாடவேண்டும். ஒரு சில பக்தர்களும், படித்தவர்களும், ஒரு சில அபிமானிகளும் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் படிக்க வேண்டும். அனைவரும் படிப்பது மட்டுமல்லாமல் மக்களிடையில் பரப்ப வேண்டும், படிப்பதிலும், பரப்புவதிலும், நாம் பெருமைப்பட வேண்டும். பலகாலமாகப் பரப்பப்பட்டு வந்த பல தப்பெண்ணங்களை நீக்க வேண்டும். பக்தி இலக்கியங்களையும் பாரதியின் பாடல்களையும் இலக்கியங்களையும் மக்களிலக்கியங்களாக வேரூன்றச் செய்ய வேண்டும். இந்த நோக்கில் இந்த எளிய பணியைச் செய்துள்ளோம்.

சில இடங்களில் இந்த நூலில் சில பாடல்களையும், சில கருத்துக்களையும் திரும்பத்திரும்பக் கூறியிருக்கலாம். ஆண்டவன்