பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6.கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள்

120


கண்ணன் பாட்டுகளில் மட்டுமல்லாமல் இதர பாடல் தொகுதிகளிலும் கண்ணன் பெருமைகளைப் பற்றிப் பாடுகிறார். இன்னும் பாஞ்சாலி சபதத்தில் கண்ணனின் பெருமைகளைப் பற்றி உச்சத்திற்கு உயர்த்திக் கொண்டு சென்றுள்ளார். பாரதி கண்ணன் பாட்டுகளில் கண்ணனுடன் இரண்டறக் கலந்து பிரம்ம ஞானியாகி விட்டார்.

பெரியாழ்வார்

பெரியாழ்வார் கண்ணனைப் பல வேறு வடிவங்களில் வர்ணித்துப் பாடுகிறார். மதுரைப் பிரானுக்கு பல்லாண்டு பாடுகிறார். கண்ணனுடைய அவதாரச் சிறப்பைப் பற்றிப் பாடுகிறார். கண்ணனுடைய திருப்பாதம் முதல் கேசம் வரையிலான அவனுடைய அத்தனை அங்கங்களின் அழகையும் அவற்றின் அருஞ் செயல்களையும் பற்றிப் புகழ்ந்து பாடுகிறார்.

கண்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவதாக ஆழ்வார் தாலாட்டுப் பாடல் பாடுகிறார். இன்னும் கண்ணனின் அம்புலிப் பருவத்தை, செங்கீரைப் பருவத்தை, சப்பாணிப் பருவத்தை, தளர் நடைப் பருவத்தை, அச்சோப் பருவத்தை, ஆழ்வார் தன்னை யசோதையாகப் பாவித்து மிக அழகாகப் பாடுகிறார். கண்ணன் பின்னால் வந்து தன் முதுகைக் காட்டுவதைப் போல பாவித்துப் பாடுகிறார். கண்ணனை முலைப்பால் உண்ண அழைத்துப் பாடுகிறார்.

கண்ணனுக்குக் காதணி விழா நடத்துவது, நீராட அழைப்பது, குழல் வார அழைப்பது ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துவதாகக் கற்பித்துப் பாடுகிறார்.

கண்ணனைப் பூச்சூட அழைத்தும், திருஷ்டிப்பட்டு விடாதபடி காப்பிட அழைத்தும் பாடுகிறார். கண்ணன் வெண்ணெய் திருடித் தின்றது பற்றி கண்ணனடைய திருவிளையாடல் தொல்லைகளைப் பற்றிய முறையீடுகளைப் பற்றிப் பாடுகிறார். கண்ணனை முலைப்பால்