பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

125


 கண்ணனே நேரில் வந்து தன் கைத்தலம் பற்றித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கனாக் கண்டதாகத் தன் தோழியிடம் கூறுகிறாள். அது ஒரு அற்புதமான காட்சியாகும்.

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புற மெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்

தோழி நான் என்று பாடுகிறார்.

இந்திரன் உள்ளிட்டட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்

தோழி நான் என்று பாடுகிறார்.

நாற்றிசை தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி
பூப்புனை கண்ணிப் புனித னோடென்றன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன்

தோழி நான் என்று பாடுகிறார்.

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கணாக் கண்டேன்

தோழி நான் என்று பாடுகிறார்.