பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

9


திருநாமத்தை எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் கூறலாம். சில பாடல்கள் முழுமையாகவும் விரிவாகவும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அப்பாடல்களைப் படிப்பவர்கள் முழுமையாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்திலேயே விரிவான மேற்கோள்கள் எடுத்துக் காட்டிக் கூறப்பட்டிருக்கின்றன.

இந்நூலைச் சரிபார்த்து, அச்சுப் பிழைகள், ஒத்துப் பிழைகளைத் திருத்திய உதவிய எனது மகள் கி. பகீரதி பி.ஏ.பி.எட், எம்.ஏ தமிழ் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்நூலின் கையெழுத்துப்பிரதியைப்படி எடுக்கவும், எழுதுவதற்கு ஊக்க மூட்டியும், அச்சகத்திற்குக் கொண்டு செல்வதற்குத் துணையாக இருந்த எனது துணைவியார் திருமதி.நாகலட்சுமிக்கும் எனது நன்றி உரித்தாகும்.

எனது முந்திய நூல்களைக் குறிப்பாக, பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி, பாரதியின் புதிய ஆத்திசூடி ஒரு விளக்கவுரை, சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் என்னும் நூல்களை நன்கு ஆதரித்த தமிழ் மக்களுக்கும் எனது நன்றி உரித்தாகும். இந்த நூலை சிறந்த முறையில் அச்சுக் கோர்த்தும் அச்சடித்தும் உதவிய நண்பர்களுக்கும் எனது நன்றியைப் பதிவு செய்து கொள்கிறேன்.

அ.சீனிவாசன்

நூலாசிரியர்