பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாதியும்-அ. சீனிவாசன்

129


அற்ற மே லொன்றறி யீர்
அவனல்லால் தெய்வமில்லை

கற்றினம் மேய்த்த வெந்தை

கழலிணை பணிமினீரே


என்று குறிப்பிட்டுப் பாடுகிறார்.


திருப்பாணாழ்வார் தனது அமலனாதி பிரான் பாடல்களில்


ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்,

ஞால மேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்

கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும்

முடிவில்லதோர் எழில்

நீல மேனியை யோ

நிறை கொண்ட தென் நெஞ்சினையே

என்று பாடிக் கண்ணனைத் தனது நெஞ்சில் நினைவு கொள்கிறார்.

திருமங்கையாழ்வார்


திருமங்கையாழ்வார் திருமாலின் பலவேறு வடிவங்களையும் அவதாரங்களையும், அவதாரப் பெருமைகளையும், திருமால் குடி கொண்டிருக்கும், எழுந்தருளியிருக்கும் பல திவ்ய தேசங்களையும் அவைகளின் சிறப்புகளையும் பற்றி மிகவும் சிறப்பாகப் பல பாசுரங்களையும் பாடியுள்ளார். அவர் கண்ணபிரானைப் பற்றியும் தனிச் சிறப்பாக அனுபவித்துப் பாடியுள்ளார்.

திருமங்கையாழ்வார் பெருமான் தனது வாழ்க்கையில் பலவேறு இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவித்துக் கடைசியில்