பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 137

எண் டிசை யோரும் வணங்க

இணை மருதூடு நடந்திட்டு அண்டரும் வானத்துவரும்

ஆயிரம் நாமங்களோடு திண்டிறல் பாட வருவான்

என்றும்,

வளைக் கை நெடுங்கண் மடவார்

ஆய்ச்சியர் அஞ்சி யழைப்ப தளைத் தவிழ் தாமரைப் பொய்கைத் தண்டடம் புக்கண்டர் காண

முளைத்த எயிற்றழல் நாகத் துச்சியில் நின்றது வாட

திளைத்தமர் செய்து வருவான்

என்றும் ஆழ்வார் பாடி மகிழ்கிறார்.

இன்னும் திரு நாங்கூர் எம்பிரானை பூதகியைக் கொன்றவன் என்றும் காணியன் மீது ஏறி நின்று நடனமாடியவன் என்றும், பாராட்டிப் பாடி மகிழ்கிறார். திருநாங்கூர் வைகுண்ட விண்ணகரத்தில் அமர்ந்துள்ள பிரானைக் கண்ணன் என்றும், அக்கோயிலைக் கண்ணன் விரும்பும் கோயில் என்றும் பாவித்து,

பெண்மை மிகு வடிவு கொடு வந்த வளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள உயி

ருண்டு, திண்மை மிக மருதொரு நற்