பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 139 முன் கண்டு மகிழ் வெய்த, குடும்பமிகு மத யானை மருப் பொசித்துக் கஞ்சன் குஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில்

என்றும்

தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆரு யிரும் செகுத்தான், காமனைத் தான் பயந்த கரு மேனி யுடையம் மான் கருதுமிடம்

எனவும்,

கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்ந்த காளை, காமருசீர் முகில் வண்ணன் காலி கள் முன் காப்பான், குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தான் குலவுமிடம்

என்றும்,

வஞ்சனையால் வந்தவள் தன் உயிருண்டு வாய்த்த தயிருண்டு, வெண்ணெயமுது ண்டு வலிமிக்க, கஞ்சனுயி ரதுவுமுண்டு இவ்வுலகுண்ட காளை கருதுமிடம்

என்றும், போற்றிப் பாடுகிறார் ஆழ்வார்.

திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்றான திருவண் புருடோத்தமம் என்னும் திரு ஊரில் அமைந்துள்ள திருமால் திருக்கோயிலை, " - -