பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 142 படல டைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப்

பக வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்,

அடலடர்த்த வேற் கண்ணார் தோக்கை பற்றி

அலந்தலைமை செய்துழலும் அய்யன் கண்டீர்

என்றும் செழிப்பு மிக்க பசுமை நிறைந்த இளங்கமுகின் முது பாளைகளும் சேற்றளையில் சிந்தும் வெண் முத்துக்களும் நீல மலர்கள் நிறைந்த சூழலில் மது அருந்தப் பாடிவரும் வண்டொலியும் அழகிய நங்கையரின் சிற்றடி மேல் எழும் சிலம் பொலியும் நெடுந்தெங்கின் பழங்கள் விழுந்தும் மாங்கனிகள் திரண்டும், மலர் மணத்துடன் பொங்கிவரும் பொன்னி நீரும், மலர் பொழில்களும் மணி மாடங்களும் நிறைந்த, ரதவீதிகளும் மாட வீதிகளும் உள்ள செங்கலங்கல் வெண் மணல் மேல் பவழும் திருநாங்கூர் திருத்தெற்றியம் பலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளைக் கண்ணனாக பாவித்து ஆழ்வார் அழகுறப் பாடுகிறார்.

திருநாங்கூருக்குக் கிழக்கே உள்ள திருக்காவளம் பாடி என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தளியுள்ள எம் பெருமானைப் பற்றி,

மல்லரை யட்டு மாளக்

கஞ்சனை மலைந்து கொன்று

பல்லசர விந்து வீழப்

பாரதப் போர் முடித்தாய்

என்றும்

மூத்தவர்க் கரசு வேண்டி

முன் தூது எழுந்தருளி