பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும்_பாரதியும் - அ. சீனிவாசன் 143

மாத்தமர் பாகன் வீழ

மத கரி மருப் பொசித்தாய்

என்றும் பாடியுள்ளார்.

திருவெள்ளக் குளத்து சீனிவாசப் பெருமாள்மீதுதிருமங்கையாழ்வாருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அப்பெருமானை கண்ணனாகப் பாவித்து,

குன்றால் குளிர் மாரி தடுத்து கந்தானேஎன்றும்

கானார் கரி கொம்ப தொசித்த களிறேஎன்றும்

கோலால் நிரை மேய்த்த எங்கோவலர் கோவே என்றெல்லாம் குறிப்பிட்டுப் பாடி மகிழ்ந்தார்.

திருவெள்ளியங்குடி கண்ணபிரான் கோவிலைப் பற்றி

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டொருகால்

ஆலிலை வளர்ந்த வெம் பெருமான்

பேய்ச்சியை முலையுண்டிணை மருதிறுத்துப்

பெருநிலம் அளந்தவன் கோயில்

எனவும்

ஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைத்திட்ட

அரக்கம் தம் சிரங் களை உருட்டி,

கார் நிறை மேகம் கலந்த தோர் உருவக்

கண்ணனார் கருதிய கோயில்

என்றும்,