பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 144

கடுவிடமுடைய காளியன் தடத்தைக்

கலக்கி முன்னலக்கழித்து அவன்றன் படமிறப்பாய்ந்து பன் மணி சிந்தப்

பல் நடம் பயின்றவன் கோயில்

என்றும்,

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த

காள மேகத்திருவுருவன் பறவை முன் உயர்த்துப் பாற்கடல் துயின்ற

பரமனார் பள்ளி கொள் கோயில் பாரினை உண்டு, பாரினை உமிழ்ந்து

பாரதம் கையெறிந்து, ஒரு கால் தேரினையூர்ந்து தேரினைத் துரந்த

செங்கண் பால் சென்றுறை கோயில்

என்றெல்லாம் ஆழ்வார் பிரான் பாடுகிறார்.

திருப்புள்ளம் பூதங்குடியை மருதம் சாய்ந்த கண்ணன் வாழுமிடம் என்றும்

மையார்தடங்கண் கருங் கூந்தல்

ஆய்ச்சி மறைய வைத்த தயிர், நெய்யார் பாலோடு அமுது செய்த

நேமியங்கை மாயனிடம் என்றும்,

கறையார் நெடுவேல் மற மன்னர்

வீயவிஜயன் தேர் கடவி