பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 149

கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்

என்றும்

மிடையா வந்த வேல் மன்னர்

விய விஜயன் தேர் கடவி

குடையா வரை யொன்றெடுத்தாயர்

கோவாய் நின்றான் கூராழிப் படையான்

என்றும்

பந்தார் விரலாள் பாஞ்சாலி

கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர்

கலங்கச் சங்கம் வாய் வைத்தான்

என்றும், நான்கு வேதங்களையும் ஐந்து வேள்விகளையும் ஆறு அங்கங்களையும், ஏழு இசைகளையும் நன்கு பயின்று அதில் வல்லவர்களான அந்தணர்கள் வாழும் நறையூர் நின்ற நம்பியின் பெருமைகளைச் சிறப்பாகப் பாடி ஆழ்வார் இன்புற்று மகிழ்கிறார்.

திருநறையூர் நம்பியின் திவ்ய தரிசனத்தைக் கண்ணன் வடிவத்திலும் கிடைக்கப் பெற்றதாக ஆழ்வார் பெரும் மகிழ்ச்சியுடன் பாடுகிறார்.

உம்பர் உல கோடு உயிரெல்லாம் உந்தியில்

வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை நம்பனை நாடி நறையூரில் கண்டேனே

என்றும்,