பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 151

செஞ்சொல் நான் மறையோர் தெ ன்னழுந்தையில் மன்னி நின்ற அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்

கண்டு கொண்டேனே

என்றும் பாடி மகிழ்கிறார். மேலும்,

கும்பமிகு மத வேழம் குலையக் கொம்பு பறித்து மழவிடையடர்த்துக் குரவைக் கோத்து, வம்ப விழும் மலர்க்குழலாள் ஆய்ச்சி வைத்த

தயிர் வெண்ணெயுண்டுகந்த மாயோன் காண் மின்,

என்றும் திருவழுந்துர் பிரானை நினைத்து மகிழ்ந்து பாடுகிறார்.

திருகண்ணபுரம் செளரிராஜப் பெருமானைக் கண்ணனாகப் பாவித்து, --

குன்றால் மாரி பழுதாக்கிக்

கொடி யோ ரிடை யாள் பொருட்டாக வன்தாள் விடை யேழன்றடர்த்த

வானோர் பெருமான் மாமாயன் சென்றான் துது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சின மளித்து கன்றால் விளங்காய் எறிந்தானுர்

கண்ணபுரம் நாம் தொழுதுமே!

என்று பாடி கண்ணனை ஆழ்வார் வணங்குகிறார்.