பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 152

திருக்கண்ண புரத்துப் பெருமானின் தசாவதாரப் பெருமையைப் பேசும் ஆழ்வார்பிரான்,

துவரிக் கனி வாய் நில மங்கை

துயர் தீர்ந்துய்யப் பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற

இருள் நாள் பிறந்த அம்மானை, உவரி யோகம் முத்துந்த

ஒரு பால் ஒரு பால் ஒண் செந் நெல்

கவரி வீசும் கண்ண புரத்து

அடியேன் கண்டு கொண்டேனே! என்று கிருஷ்ணாவதாரப் பெருமையைப் பாடுகிறார்,

திருக் கண்ணங் குடியில் எழுந்தருளியுள்ள சியாமள மேனிப் பெருமாளை,

பன்னிய பாரம் பார் மகட் கொழியப்

பாரத மாபெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடுந்திண் தேரை

மைத்துனர்க்குய்த்த மாமாயன் என்று பூபாரம் தீர்க்க வந்த கண்ணனாக பாவித்துப் பாடுகிறார். திருக்குறுங்குடி எம் பெருமானை ஆழ்வார்,

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான் தேர் ஐவர்க்காய் அன்ற மரில் உய்த்தான் ஊர் போலும்,

என்று பாடி மகிழ்கிறார்.