பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 156

தொண்டர் கைத் தண்டென்ற வாறே

(பெரிய திருமொழி 10)

எனவும்,

பெரு வழி நாவற் கனியினும் எளியள்

இவள் எனப் பேசுகிறாயே எனவும்

எருக்கிலைக்காக எறி மழு வோச்சல்

என் செய்வ தெந்தை பிரானே எனவும்,

கோழி வெண் முட்டைக் கென் செய்வ தெந்தாய்

குறுந்தடி நெடுங்கடல் வண்ணா

என்றும்,

கவுள் கொண்ட நீராம் இவள்

எனக்கருது கின்றாயே எனவும், ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட

மாக நின் மனது வைத்தாயே எனவும்

எனது மகளை இத்தனை இளக்காரமாக நினைத்தாயா என்று கண்ணனைப் பார்த்துக் கேட்பதாக அமைந்துள்ள இப்பாடல் நமது நாட்டின் சாதாரண மக்களிடையில் உள்ள பண்பாட்டைச் சுட்டிக் காட்டிக் கண்ணனைத் தன் வசம் கொண்டு வர முயற்சிப்பதாக

கண்ணனை நான் அடைய வேண்டும். அதற்காக, திருத்தாய் செம்போத்தே கரையாய் காக்கைப் பிள்ளாய், கூவாய் பூங்குயிலே, கொட்டாய் பல்லிக் குட்டி, சொல்லாய் பைங்கிளியே, கோழி கூவென்னு மால், என்றெல்லாம் செம்போத்தை, காகத்தை, குயிலை, பல்லியை, கிளியை, கோழியை, பரகால நாயகி கேட்பதாக ஆழ்வார் நாயகி