பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 157 பாவத்தில் பாடும் இப்பாடல்கள் மிக்க இனிமையானவை. இதே போல பாரதியின் கண்ணம்மா பாடல்களிலும் காதலினிமையைக் காணலாம்.

ஆழ்வார் தன்னைப் பிராட்டியாகப் பாவித்துக் கண்ணணையும், இராமனையும் நினைந்து தான் பிரிவு நோயால் வருந்துவதாகக் கற்பித்துப் பாடும் அருமையான பாடல்கள்

குன்ற மொன் றெடுத்தேந்தி, மாமழை அன்று காத்தவம்மான், அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொ லோ தென்றல் வந்து தீ விசு மென் செய்கேன்

என்று தென்றல் வங்து தீ போல் வீசுவதாகவும், இன்னும் வாடைக் காற்று தன்னை வாட்டுவதாகவும் திங்கள் வெங்கதிர் (நிலவு) சீறுவதாகவும், பொங்கு மா கடல் புலம்புவதாகவும் மன்மதன் தன் ஆவியை இலக்காக வைத்து அம்பு வீசுவதாகவும், திருத்துழாய் வாசனை தான் தன்னைக் காக்கும் என்றும் பாடுகிறார்.

கண்ணனைக் காணாத கண்கள் கண்களல்ல, கண்ணன் பெருமைகளைக் கேளாத செவிகள் செவிகளல்ல. அவன் பெருமையைப் பேசாதார் பேச்சொன்றும் பேச்சல்ல, அவனைப் பாடாதார் பாட்டொன்றும் பாட்டல்ல. சங்கேந்தும் கையானைத் தொழாத கை கையல்ல, கண்ணனை நினைக்காத உள்ளம் உள்ளமல்ல, அவனுக்கு மலர் இட்டுத் தொண்டு செய்யாத தொண்டு தொண்டல்ல என்றெல்லாம் ஆழ்வார் பாடி மகிழ்கிறார்.

மனித வாழ்க்கையில் பல கஷ்டங்கள் உள்ளன. இன்னல்களும், தொல்லைகளும் நிறைந்துள்ளன. அவைகளிலிந்து ஒரு ஆறுதலும் நிவாரணமும் கிடைக்கவும், அத்தொல்லைகள் நீங்கவும் மனிதன்