பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 158

அரும்பாடு படுகிறான். ஆண்டவனை வேண்டுகிறான். இந்த வாழ்க்கை அனுபவங்களை ஆழ்வார் நன்குணர்ந்து மிக அருமையான எடுத்துக் காட்டுகளைக் கூறிப் பாடுகிறார்.

வாழ்கையில் ஏற்படும் துன்ப, துயரங்கள் பற்றியும், அபாயங்களைப் பற்றியும், அச்சங்களைப் பற்றியும், ஆற்றங்கரை வாழ் மரம் போல அஞ்சுகிறேன் என்றும், காற்றத்திடைப் பட்ட கலவர் மனம் போல என்றும் இருபாடெரி கொள்ளியினுள் எறும்பு போல் என்றும், வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போல் என்றும், இடையன் எறிந்த மரமே யொத்திராமே (அரை குறையாக வெட்டப் பட்ட மரம் போல்) என்றும், வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது என்றெல்லாம் கூறி எனக்கு உய்யும் வகை கூறுவாய் அருள் புரிவாய் என்று கண்ணனை வேண்டுகிறார்.

திருமங்கையாழ்வார் ஆழ்வார்களில் ஒரு தனித் தன்மையானவர். அவர் ஒரு வீரன். கள்ளன், கொள்ளைக்காரண், பெண் விரும்பி, பெண்ணாசை கொண்டவர், உலக வாழ்க்கையைப் பல வகைகளிலும் நன்கு அனுபவித்தவர். ஆயினும் அவருக்குத் திருமால் திருவருளால் ஞானம் பிறந்தது. நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தின் உட் பொருளை அறிந்து மிகவும் தீவிரமான திருமால் பக்தராகிறார். திருமாலின் எல்லா வடிவங்களையும் எல்லா பரிமாணங்களையும் அனுபவித்துப் பாடுகிறார், திருமால் குடி கொண்டுள்ள கோயில்களையும் அதன் பெருமைகளையும் அங்கு எழுந்தருளியுள்ள மூர்த்திகளின் அருமை பெருமைகளையும் அக்கோயில்கள் உள்ள திவ்ய தேசங்களின் சிறப்புகளையும் வளங்களையும் பலவாறாகச் சிறப்பித்துப் பாடுகிறார்.

கண்ணனைக் குழந்தையாகவும், நாயகனாகவும், தன் மகள் விரும்பும் மணாளனாகவும், பாவித்து ஆழ்வார் பாடுகிறார், கண்ணனுடைய வலிமை, அவனுடைய அவதார மகிமை, சாகசங்கள்,