பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 160

விடவில்லையா? பிறப்பால் உயர்வு தாழ்வு கூறப்பட்ட உலகில் பிறப் பறியாமல் பிறந்த ஆழ்வார்களின் ஒருவர் பொய்கை ஆழ்வார். இவர் பக்தியும், ஞானமும் பெற்றுச் சிறந்த ஆழ்வாராக பல அறிய

பாடல்களைப் பாடியுள்ளார்.

நன்மையும் அறிவும் எத்திசைத் தெனினும் பாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ் விராயின் அச்சமொன்றில்லை என்று பாரதி பாடிய வரிகள் இங்கு நினைவில் கொள்ளலாம்.

“வையம் தகளியா வார் கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே" என்று

பொய்கையாழ்வார் பிரான் தனது பாசுரங்களைத் தொடங்குகிறார்.

எட்டுத்திசைகளையும் அவைகளுக்குரிய தெய்வ சக்திகளையும் அவைகளுக்கிசைவான கருமங்களையும் கண்ணனே படைத்தான் என்னும் கருத்தில்,

"திசையும், திசையுறு தெய்வமும் தெய்வத் திசையும் கருமங்களெல்லாம் அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடந்த காரோத

வண்ணன் படைத்த மயக்கு.”

பாரதப் போரில் அபிமன்னனைக் கொன்ற ஜயத்ரதனை அன்று மாலைக்குள் கொல்லப் போவதாகவும் முடியாவிட்டால் தான் தீயில் குதித்து சாகப் போவதாகவும் அர்ஜுனன் சபதம் கூறினான். கெளரவர்கள் ஜயத்ரதனை ஒளித்து வைத்து விட்டார்கள். பொழுது சாய்வதற்கு முன், கண்ணன் மாயமாகத் தனது சக்கராயுதத்தை