பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 174

“ துஞ்சா முனிவரும் அல்லா

தவரும் தொடர நின்ற எஞ்சாப் பிறவி இடர்கடி

வான், இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப்பெரு

மூர்த்தி தன்மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே”

என்றாலும்,

'ஈனச் சொல்லாயினுமாக

எறிதிரை வையம் முற்றும், ஏனத்துருவாய் இடந்த பிரான் இருங்கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும்

மற்றெல்லாய வர்க்கும் ஞானப்பிரானையல் லாலில்லை

நான்கண்ட நல்லதுவே" என்று, தலைவி தலைவனிடம் உள்ள அன்பின் உறுதியைக் கூறுவதாகப் பாவித்து ஆழ்வார் அழகாகப் பாடுகிறார். திருவாசிரியம்

திருமாலின் பெருமைகளையும் குணங்களையும் அனுபவிக்கும்

பொருட்டு, அவரைத் தேடி பரமபதம் செல்ல வேண்டியதில்லை. அந்த பகவானே நம்மைத் தேடி வந்து அவனது பெருமைகளையும்