பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் | է,

"வலியம் என நினைந்து வந்தெதிர்த்த மல்லர், வலிய முடியிடிய வாங்கி - வலிய நின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கிளாதே பன்னாளும் நிற்கும் இப்பார்” என்று,

கண்ணன் கருணையால் இவ்வுலகம் என்றென்றும், தீயோரை நீக்கி நல்லோரைக் காத்து நிலைத்திருக்கும் என்று பாடுகிறார்.

“வானோம் அறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றும் கண்டில மால்-ஆனின்ற கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் வன்துயரையாவா மருங்கு” என்று

பாடிக் கண்ணன் தாள் பணிந்தோம், துயர் நீங்கினோம். இனி எந்தக் கவலையுமில்லை என்று கூறுகிறார்.

"என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால் ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்-குன்று குடையாக அகாத்த கோவலனார், நெஞ்சே” புடைதான் பெரிதோ புவி, என்று பாடி குன்றைக் குடையாகப் பிடித்து ஆநிரை காத்த கோவலனுடைய காட்சியை எப்போது காண்பேன் என்று கூறுகிறார். --

"அயர்ப்பாய், அயராப்பாய் நெஞ்சமே! சொன்னேன் உயப்போம் நெறியிதுவே கண்டாய்-செயற்பால அல்லவே செய்கிறுதி நெஞ்சமே - அஞ்சினேன் மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்தி” எனவும், "வாழ்த்தி அவனடியைப் பூப்புனைந்து நின் தலையைத் தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது - பாழ்த்தவிதி