பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 179

எங்குற்றாய் என்றவனை எத்தா தென் நெஞ்சமே தங்கத்தானா மேலும் தங்கு” என்றும் கண்ணனை வாழ்த்தி வணங்குகிறார் நம்மாழ்வார் பெருமான்.

திருவாய்மொழி

நம்மாழ்வார் அருளியுள்ள திருவாய்மொழிப் பாடல்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருமையான பாடல்களாகும்.

கண்ணனே தந்தையும் தாயுமாவான் என்று பாடுகிறார்.

“வளவே ழுலகின் முதலாய்

வானோரிறையை அருவினையேன், களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும் தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய் இளவே றேழும் தழுவிய --

எந்தாய் என்பன் நினைந்து நைந்தே”

என்றும்,

“மாயோம் தீய அலவலைப்

பெருமா வஞ்சப் பேய்விய தூய குழவியாய் விடப்பால்

அமுதா அமுது செய்திட்ட மாயென் வானோர் தனித்தலைவன்

மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்