பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 180

தாயோன் தம்மான் என்னம்மான்

அம்மா மூர்த்தியைச் சார்ந்தே! என்றும் பாடுகிறார். -

ஆயர்கொழுந்தாகிய கண்ணனே எல்லோருக்கும் நலம் பயப்பவன் என்றும், நம்மைக் காக்கும் நன் மருந்து எனவும் கண்ணனை வழிபட்டு எனது மாயப்பிறவியின் மயக்கம் தீர்ந்தேன் என்றும், கண்ணனை நான் விட மாட்டேன் என்றும், அதேபோலக் கண்ணனுக்கும் என் நெஞ்சை விட்டுப் பிரிய முடியாது என்றும், அல்லும் பகலும் அவனையே பாடி மகிழ்வேன் என்றும் பாடுகிறார். இப்பாடல்களைப் பாடினால் எல்லா நோய்களும் தீரும் என்றும் ஆழ்வார் பாடுகிறார்.

கண்ணபிரான் என்னைச் சுற்றிலும் உள்ளான் என்றும், என் அருகில் வந்தான் எனவும் என் கண்களிலும் இதர புலன்களிலும், நெற்றியிலும் உள்ளான் என் தலை உச்சியில் நிலையாக அமர்ந்துள்ளான் என்றும் இப்பாடல்களைப் பாடினால் கண்ணனடி சேரலாம் எனவும் பாடுகிறார்.

கண்ணா, என்னை விட்டு விடாதே என்று கூறி,

“வேவாரோ வேட்கை நோய் மெல்லாவி உள்ளுலர்த்த ஒவாதிராப்பகல் உன்பாலே வீழ்த் தொழிந்தாய் மாவாய்ப்பிளந்து மருதிடை போய் மண்ணளந்த மூவா, முதல்வா, இனி.எம்மைச் சோரேலே”

என்று பாடுகிறார்.

ஆழ்வார் தன்னை ஒரு தாயின் அன்பு மகளாக பாவித்து, அவளது தாய், தன் மகள் கண்ணனை நினைந்து வருந்துவதாகக் கற்பித்து அழகிய பாடல்களை பாடியுள்ளார்.