பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 181

கண்ணனது வாய் செம்பவளம், கை, பாதம், கண்கள் தாமரை மற்ற உறுப்புகள் இதழ்கள் என்று கற்பித்து ஆழ்வார் பாடுகிறார்.

"ஆரா அமுதமாய் அல்லாவியுள் கலந்த

காரார்கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு,

நேராவாய் செம்பவளம் கண்பாதம்கை கமலம்

பேரார நீண் முடிநாண் பின்னும் இழை பலவே”

என்பது ஆழ்வாரின் பாடலாகும்.

நான் எத்தனை பிறவி எடுத்தாலும், இறந்தபின் சுவர்க்கமோ, நரகமோ எந்த கதி கிடைத்தாலும், கண்ணா உன்னை நான் மறவேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்

இறப்பில் எய்துக எய்தற்க யானும்

பிறப்பில் பல்பிறவிப் பொருமானை

மறப் பொன்றின்றி என்றும் மகிழ்வேனே

என்று ஆழ்வார் பாடுகிறார்.

உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் கண்ணனே, ஆன்மாக்கள் அனைத்தும் கண்ணனே என்றும், கண்ணனே எல்லாப் பொருள்களும் ஆன்மாக்களும் என்றும் பொருள்பட “புகழும் நல்லொருவன் என்கோ” என்று தொடங்கி, “யாவையும் யவரும் தானாய்" என்று முடியும் பாடல்கள் பத்தும் தத்துவ ஞானப் பொருள் நிறைந்த பாடல்களாகும். இப்பாடல்கள் ஏற்கனவே முதல் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

கண்ணனின் பெருமை குறித்து மேலும் பாடுகிறார்.