பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 182

“சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு

ஆதியஞ் சோதி யுருவை அங்கு வைத்திங்கு பிறந்த

வேத முதல்வனைப் பாடி விதிகள் தோறும் துள்ளாதார்,

ஒதியுணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே,

“மணிசரும் மற்றும் முற்றுமாய் மாயப்பிறவி பிறந்த

தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல்

சேர்ந்தபிரானை

கனியைக் கரும்பினின் சாற்றைக் கட்டியைத் தேனை

அமுதை

முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர்

நீர்மையினாரே'

“நீர்மையில் நூற்றுவர் விய ஐவர்க்கருள் செய்து நின்று

பார்மல்குசேனை அவித்த பரஞ்சுடரை நினைந்தாடி நீர்மல்கு கண்ணின ராகி நெஞ்சம் குறைந்து நையாதே

ஊர்மல்கி மோடுபருப்பார் உத்தமர் கட்கென்செய்வாரே”

என்றெல்லாம் ஆழ்வார் ஆனந்தமாகப் பாடி மகிழ்கிறார்.

கண்ணனின் அடியார்கள், கண்ணனைப் பணிவோர்கள், கண்ணனின் அடியார்க்கு அடியார்கள் ஆகியோரே எம்மை ஆள்பவர் என்றும், கண்ணனை நினைப்பவரே எம்மைக் காப்பவர் என்றும் அவர்களே எம்மை உய்விப்பவர் என்றும் ஆழ்வார் பாடுகிறார்.

கண்ணனைப் பாடினால் தட்டுப்பாடு இருக்காது. துன்பங்களே நம்மைத் தொடாது. இடையூறே நமக்கு இல்லை. துயரங்கள் நீங்கும்.