பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் - 197

கண்ணனைப் பற்றிய மற்றும் கண்ணன் தொடர்பான பாரதியின் படைப்புகளில் மணி முடியாகத் திகழ்வது அவருடைய பகவத் கீதை தமிழாக்கமும், அதற்கு அவர் எழுதியுள்ள முன்னுரையுமாகும்.

பாரதியின் கண்ணன் பாட்டு ஒரு தனி இலக்கியமாகும். அவை புதிய ஆதர்சத்தையும் புதிய ஊக்கத்தையும் புதிய எழுச்சியையும் கொடுப்பவை.

“பாரதியின் பாஞ்சாலி சபதம்” அவர் படைத்துள்ள அற்புதமான காவியம். அதில் தோன்றும் கண்ணன் நமது தாயின், நமது மாதாவின் மானத்தைக் காப்பாற்றுகிறார்.

ஆழ்வார்களும், அவர்களுடைய பக்திப் பாடல்களும், அவர்களுடைய செயல்பாடுகளும் பாரத சமுதாயத்தின் வரலாற்றில் வரலாற்று வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டமாகும். அதில் பக்தி இயக்கத்தின் பிரவாகத்தில் ஆழ்வார்கள் தமிழ் மக்களை அழைத்துச் செல்கிறார்கள். அதில் கண்ணனும் கண்ணனுடைய பெருமைகளுடன் அருஞ்செயல்களின் நினைவுகளும் முக்கிய இடம் பெருகின்றன.

அன்னிய ஆட்சியின் கொடுமைகளுக்கு ஆளாகி, கடுமையான துன்பதுயரங்களை சந்தித்து, அவைகளை எதிர்த்து, அடிமை விலங்குகளை முறித்தெரிந்து, விடுதலைக் குரலை பாரத மக்கள் எழுப்பத் தொடங்கிய ஒரு புதிய வரலாற்று கட்டத்தில், தேசிய விடுதலை இயக்கப் பிரவாகத்தின் தொடக்கமாக பாரதி புதிய ஒளியைப் பரப்பத் தொடங்கினார். அந்தப் புதிய ஒளியில் கண்ணனும் கண்ணனுடைய செயற்கரிய செயல்களின் நீங்காத நினைவுகளுடன் இடம் பெறுகின்றான்.

பல தெய்வங்களின் வழிபாடுகளில் பாரதி பேதம்