பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 198

காட்டவில்லை. எல்லா தெய்வங்களையும் ஒன்றாகவே கண்டார். என்றாலும் பாரதியின் கவிதா மண்டலத்தில் கண்ணனுக்குத் தனி இடம் இருப்பதைக் காண்கிறோம்.

பாரதி தனது விநாயகர் நான்மணி மாலையில்:

“இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித் தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்

உள்ளொளியாகி உலகெலாம் திகழும்,

பரம் பொருளேயோ! பரம் பொருளேயோ! ஆதிமூலமே! அனைத்தையும் காக்கும், தேவதேவா! சிவனே, கண்ணா

வேலா, சாத்தா, விநாயகா, மாடா,

இருளா, காளி, மாமகளேயோ ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள தியாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே!

வேதச்சுடரே, மெய்யாங் கடவுளே! அபயம், அபயம், அபய நான் கேட்டேன் நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன் அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன் பாவம் வேண்டேன், பல்சுவை வேண்டினேன், இழிவு வேண்டேன், இன்பம் வேண்டினேன் உடமை வேண்டேன், உன் துணை வேண்டினேன், பிறர்துயர் வேண்டேன், பெருமை வேண்டினேன்

கொலையினை வேண்டேன், தலைமையை

வேண்டினேன்