பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 204

வூறித்ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை He

வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்

விண்ணவனாகப் புரியுமோ - இந்தக்

(காற்று வெளியிடை)

நீயென துயிர் கண்ணம்மா - எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்

போயின, போயின துன்பங்கள் - நினைப்

பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்

வாயினிலே அமுதுாறுதே - கண்ணம் மாவென்ற பேர் சொலும் போழ்திலே - உயிர்த்

தீயினிலே வளர் சோதியயே - என்றன்

சிந்தனையே என்றன் சித்தமே - இந்தக்

(காற்று வெளியிடைக்)

என்று பாடுகிறார். பாரதியின் மிகச் சிறந்த பிரபலமான பாடல்களில் இது ஒன்றாகும். தனிச் சிறப்புமிக்க இந்தப் பாடல் பாரதிக்குக் கண்ணன் பாலுள்ள உணர்வு பூர்வமான ஈடுபாட்டைத் தெளிவுபட

எடுத்துக் காட்டுகிறது.

மனமே என்னும் தலைப்பில்

“கண்ணன் திருவடி எண்ணுக மனமே

திண்ணம் அழியா வண்ணம் தருமே”