பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 209

பொறிகளின் மீது தனியரசாணை,

பொழுதெல்லாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம் கர்ம யோகத்தில்

நிலைத்திடல் என்றிவையருள்வாய்

குறி குணம் ஏதுமில்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே’

என்று கண்ணபிரானை நினைத்து அருள் வேண்டிப்பாடி முடிக்கிறார்.

கண்ணன் பாட்டு

பாரதியின் கண்ணன் பாட்டு ஒரு தனி இலக்கியமாகும். ஒரு தனித்தன்மையான சிறப்பு இலக்கியமாகும். அப்பாடல்களில் ஆழ்வார்களின் பாவனைகளும் பக்திச் சுவைகளும் இருப்பதைக் காணலாம். பாரதியும் ஆழ்வார்களைப் போலவே தன்னை மறந்தும், தன்னை முழுமையாக கண்ணன் பால் ஈடுபடுத்திக் கொண்டும், இணைத்துக் கொண்டும் பாடுகிறார்.

பாரதியும் ஆழ்வார்களைப் போலவே பக்தியை ஒரு உருவமாகக் கொண்டும் சமுதாய நலன்களையும் நாட்டுக் காட்சிகளையும் உலகக் காட்சிகளையும் உள்ளடக்கமாகக் கொண்டும் பாடுகிறார்.

பாரதியின் கண்ணன் பாட்டுகள், ஆழ்வார்களின்

காலத்திலிருந்து வளர்ச்சி பெற்று புதிய வரலாற்றுச் சூழ்நிலைகளில்,

புதிய பரிமாணங்களை எட்டிப்பிடித்து, புதிய பல கருத்துக்களுடன்

செரிவு பெற்று விரிவடைந்திருக்கின்றன. பாரதியாரின் கண்ணன்

பாட்டுப் பாடல்களும் ஆழ்வார்களின் இனிய பாசுரங்களைப் போலவே

நம்மை நெகிழ வைக்கின்றன. நெறிப் படுத்துகின்றன. ஒரு நிலைப்படுத்துகின்றன.