பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 215

உண்மை தவறி நடப்பவர்களை உதைத்து நசுக்கி விடுவான். ஆனால் அவனோ தனது வண்மையினால் மலை மலையாகப் பொய்களைக் கூறிடுவான். கண்ணன் பல பெண்மை குணங்களும், பித்தர் குணங்களும் சில நேரங்களில் நெருப்பின் குணங்களையும் கொண்டவன் என்று பாரதி கூறுகிறார்.

கண்ணன் கொலைக் கஞ்சாத மறவர் குணம் கொண்டவன். ஆயினும் குழந்தைகளைப் போல சூது வாது அறியவாதவன். அப்பாவித்தனமாகக் காட்சியளிப்பவன். நல்லவர்களுக்குத் தீங்கு விளையாமல் அவர்களைக் காத்திடுவான். அல்லவர்களுக்காயின் விடத்தைப் போல், நோயைப் போல், நெருப்பைப் போல் கொடியவனாகவும், இருப்பான் என்று கண்ணனுடைய குணச்சிறப்புகளைப் பற்றி பாரதி குறிப்பிட்டுக் கூறுகிறார்.

" உண்மை தவறி நடப்பவர் தம்மை

உதைத்து நசுக்கிடுவான் - அருள்

வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள்,

மலை மலையா வுரைப்பான் - நல்ல

பெண்மைக் குணமுடையான் - சில நேரத்தில்

பித்தர் குனமுடையான், மிகத்

தண்மை குணமுடையான்; சில நேரம்

தழலின் குணமுடையான் ” என்றும்,

“கொல்லும் கொலைக் கஞ்சிடாத மறவர்

குணமிகத் தானுடையான் - கண்ணன்

சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு

சூதறியாது சொல்வான் - என்றும்,