பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 215

நல்லவருக்கொரு தீங்கு நண்ணாது

நயமுறக் காத்திடுவான் - கண்ணன்

அல்லவருக்கு விடத்தினில் நோயில்

அழலினும் கொடியான்” என்று அழகுறப்பாடுகிறார்.

காதல் விளையாட்டுகளில், பாட்டினில், சித்திரங்கள் வரைவதில், படைத் தொழில் முதலிய பல தொழில்களிலும் பாண்டித்யம் உடையவன், அக்கண்ணன் வேதம் அளித்த முனிவர்களின் உணர்வில் பரம்பொருளாவான். அவன் எனக்குக் கீதையை உரைத்து

மகிழ்ச்சியடையச் செய்தவன், அவனுடைய புகழைப் பரப்பிடுவேன்.” என்றெல்லாம் பாரதி கண்ணன் புகழ் பரப்பிக் கவிதையை

முடிக்கிறார்.

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்

கண் மகிழ்சித்திரத்தில் - பகை

மோதும் படைத் தொழில் யாவினுமே திற

முற்றிய பண்டிதன் காண் - உயர்

வேத முனர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் - நல்ல

கீதையுடைத் தென்னையின் புறச் செய்தவன்,

கீர்த்திகள் வாழ்த்திடுவேன்”

என்று பாடிக் கவிதையை முடிக்கிறார்.

கண்ணன் - என் தாய்

கண்ணனைப் பாரதத் தாயாகவே கருதி பாரதி இக்கவிதையைப் பாடுகிறார். பாரதத் தாயே கண்ணன் வடிவத்தில்