பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2.உலகப் பெருவடிவம்



உலகம் முழுவதையும் நாராயண வடிவமாகவும், நாராயணனை உலக வடிவமாகவும் காண்பது ஆழ்வார்களுக்கும் பாரதிக்கும் பொதுவானதாகும்.

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,

பலகோடி நூறாயிரம்,
         
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்,

செவ்வடி செவ்வித்திருக்காப்பு”

"அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி

ஆயிரம் பல்லாண்டு,
            
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற

மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடர்

ஆழியும் பல்லாண்டு
      
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச
  
சன்னியமும் பல்லாண்டே”

என்று வில்லிபுத்தூர் பட்டர்பிரான் திருப்பல்லாண்டு பாடினார். தான் மட்டும் பல்லாண்டு பாடவில்லை. தன்னோடு சேர்ந்து உலகோர் அனைவரையும் பல்லாண்டு பாட அழைக்கிறார்.

அனந்தமே திருமாலின் வடிவம். அனந்தத்தோடு எது சேர்ந்தாலும் அதுவும் அனந்தமே. பல்லாண்டும் பல்லாண்டும் பல்லாயிரத்தாண்டும் பல கோடி நூறாயிரமும் அனந்தமே. அடியாரும்