பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 227

கண்ணன் கருப்பு நிறமுறையவன். கரு நீலமேனியன், ஆனால் களிப்பது பொன்னிறப் பெண்களுடன், என்று கூறி, பாரதி நிறவேறு பாட்டையும் நிராகரிக்கிறான். பாரதியார் மிக அருமையாக நாட்டிலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள நிற வேறுபாடுகளையும் நிராகரித்து நிற ஒற்றுமையையும் கண்ணன் வடிவத்தில் உலகுக்கு எடுத்துக் காட்டுகிறார்.

“ஏழைகளைத் தோழமை கொள்வான் செல்வம் ஏறியார்தமைக் கண்டு சீறி விழுவான், தாழவரு துன்பமதிலும் - நெஞ்சத் தளர்ச்சி கொள்ளாதவர்க்குச் செல்வமளிப்பான் நாழிகைக் கோர்புத்தியுடையான் - ஒரு நாளிருந்த படி மற்றோர் நாளினில் இல்லை பாழிடத்தை நாடியிருப்பான் - பல பாட்டினிலும் கதையினிலும் நேரமழிப்பான்,

“இன்பத்தை இனிதெனவும் - துன்பம் இனிதில்லையென்றும் அவன் எண்ணுவதில்லை அன்பு மிகவும் உடையான் - தெளிந் தறிவினில் உயிர்க்குலம் ஏற்றமுறவே வன்புகள் பல புரிவான் - ஒரு மந்திரி யுண்டெந்தைக்கு விதியென்பவன், முன்பு விதித்ததனையே - பின்பு முறைப்படியறிந்துண்ண மூட்டி விடுவான்,

என்று பாடுகிறார்.