பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'விதி பெருக்குகிறான், வீடு சுத்தமாக்குகிறான்

தாதியர்செய் குற்றமெலாம் தட்டியடக்குகிறான்

மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்

ஒக்க நயங்காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றிப்

“பண்டமெலாம் சேர்த்து வைத்துப் பால்

வாங்கி மோர் வாங்கிப்

பெண்டுகளைத் தாய்போல் பிரியமுற ஆதரித்து

நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய்

பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்

எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று

சொன்னான்

இங்கிவனை யான்பெறவே என்ன தவம்

செய்துவிட்டேன்

கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாள் முதலாய்

“எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்

செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு நற்கீர்த்தி

கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்,

தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும், ஒளிசேர் நல மனைத்தும் ஓங்கி வருகின்றன காண்

கண்ணனை நான் ஆட் கொண்டேன்

கண் கொண்டேன் கண் கொண்டேன்