பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ырышптомуш וש ווווווulu ש. ר - crוטס סיישמיוטס E = H

செய்தான், அத்தகைய எம்பெருமான், கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலியழிந்து புவித்தலம் வெல்கவே அண்ணல் நின்னருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே என்று கண்ணனை வாழ்த்தி, அவனருளால் நாட்டின் அவலம் நீங்கி நலன் பெற்று நாடு புகழடையும்படி அக்கண்ணன், கண்ணன் என்னும் அரசனை வேண்டுகிறார் கவிஞர் பாரதி.

கண்ணன் என் சீடன்

கண்ணன் என் சேவகன் என்னும் கவிதையைப் போலவே கண்ணன் என் சீடன் என்னும் கவிதையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தனித்தன்மை கொண்டது. புகழ்மிக்கது, மிகப் பிரபலமானது. அடங்காக் குழந்தை, அடங்காத சீடன், சுட்டிப் பயல் போல கண்ணனை பாவித்து அக்கண்ணனைத் தான் திருத்த முயலுவதாகவெல்லாம் பாரதியார் பாடுகிறார்.

நம்மாழ்வாரைத் தொடர்ந்து பாரதியும் கண்ணனைத் தத்துவ நிலையில் காண்கிறார்.

"யானேயாகி என்னலாற் பிறவாய்

யானும் அவையுமாய் இரண்டினும்

யாதோ பொருளாம்மாயக் கண்ணன்”

என்று கண்ணன் - என் சீடன் என்னும் பாடலைப் பாரதி தொடங்குகிறார்.

கண்ணன் சீடனாக வந்து தன்னைச் சேர்ந்ததாகக் கற்பித்துப்

பாரதி தன்னை மறந்து பாடுகிறார். அந்த மாயக் கண்ணன், என்னிலும் அறிவில் குறைந்தவன் போலவும், என்னைத்

துணையாகக் கொண்டு, என்னுடைய முயற்சியால், என்னுடன் பழகுவதால், என் சொல்லைக் கேட்பதால் அவன் மேம்பாடு எய்த