பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S SAAAS CCT TTTS TTTT S TTTTS TTTTS TSTS יענישתי-י டாத التي

வேண்டினான் போலவும், யான் சொல்லும் கதையிலும் எனது புத்தி அளவிலும், பெருமை உள்ளனவென்று அவன் கருதுவது போலவும் அந்தக் கண்ணன் கள்வன், என்னிடம் சீடனாக வந்து சேர்ந்தனன் என்றும் பாரதி கூறுகிறார்.

இந்த உலகத்திலே உள்ள மாந்தர்க்கு உற்ற துயர்களையெல்லாம் போக்கி, இன்பத்தை நிறுத்த நான் எண்ணினேன். அந்தப் பிழைக்காக எனக்கு தண்டனை கொடுக்க எண்ணி மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும் பலவகையாய் அகப்பற்றுறச் செய்தான் என்று பாரதி குறிப்பிடுகிறார்.

அவ்வாறு தன்னிடம் வந்த மாயக் கண்ணனைச் சீடனாக

ஏற்று அவனை உயர்நிலைப்படுத்த ஊக்கம் கொண்டு அவனிடம்

"இன்னது செய்திடேல், இவரோடு பழகேல்,

இவ்வகை மொழிந்திடேல், இணையன விரும்பேல்

இன்னது கற்றிடேல், இன்ன நூல்கற்பாய்,

இன்னவர் உறவு கொள், இன்னவை விரும்புவாய்”

எனப் பலதருமம் எடுத்தெடுத்தோதி

ஒய்விலாது அவனோடு உயிர் விடலானேன்”

என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் கண்ணனோ, பாரதி கூறிய அறிவுரைகளைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. சொன்னதற்கெல்லாம் நேர் எதிரிடையாகவே நடந்தான்.

" கண்ணனாம் சீடன்யான் காட்டிய வழியெலாம்,

விலகியே நடக்கும் விநோதமிங்கன்றியும்,