பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரத 254

இந்த உலகம் பொய், மாயை என்னும் தத்துவத்தில் பாரதிக்கு உடன்பாடில்லை. வேதங்களில் இக்கருத்தில்லை. இன்னும் மாயை என்றால் மருட்சியல்ல, பொய்த் தோற்றம் அல்ல. மாயை என்றால் சக்தி” என்று பாரதி மற்றோரிடத்தில் கூறுகிறார். சக்திக்கு அதிக முக்கியத்வம் கொடுத்து பாரதி பல பாடல்கள் பாடியுள்ளதைக்

காணலாம்.

உலகம் உண்மையானது அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். உலக இயற்கையுடன் மனிதன் இணைந்து நல்வாழ்க்கை வாழவேண்டும் என்பதே பாரதியின் தத்துவமாகும். மேலும்

“சோதியறிவில் விளங்கவும் - உயர்

சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற

நீதிமுறை வழுவாமலே - எந்த

நேரமும் பூமித் தொழில் செய்து - கலை

ஒதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்

உற்றிடும் தொல்லைகள் மாற்றியே - இன்ப

மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை

மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில்

“ஆடுதல், பாடுதல், சித்திரம் - கவி யாதி ഉണ്ഡ கலைகளில் - உள்ளம்

ஈடுபட்டென்று நடப்பவர் - பிறர்

ஈனநிலை கண்டு துள்ளுவார் - அவர்

நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில

நாளினில் எய்தப் பெருகுவார் - அவர்