பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 255

"தின்னப்பழம் கொண்டு தருவான் - பாதி

தின்கின்ற போதில் தட்டிப் பறிப்பான்”

“தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன

செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்.”

"பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை

பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான்,

“புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது

பொங்கித்ததும்பு நற்கீதம் படிப்பான்”

என்றெல்லாம் பாரதி பாடுகிறார் இன்னும்,

"விளையாட வாவென்றழைப்பான் - விட்டில்

வேலையென்றால் அதைக் கேளாதிருப்பான்,

"அம்மைக்கு நல்லவன் கண்டீர்- மூளி

அத்தைக்கும் நல்லவன், தந்தைக்கும் அஃதே!

“எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - விட்டில்

யாவர்க்கும் நல்லவன் போல் நடிப்பான்

'கோளுக்கு மிகவும் சமர்த்தன் - பொய்மை

சூத்திரம் பழி சொலக் கூசாச் சழக்கன்

“ஆளுக்கிசைந்தபடி பேசி - தெருவில்

அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்