பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 257

என்றெல்லாம், எளிய பதங்களில் எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படியாக மிக அற்புதமாகப் பாரதி, கண்ணனின் விளையாட்டு லீலைகளைப் பற்றிப் பாடுகிறார்.

கண்ணன் - என் காதலன்

இந்தத் தலைப்பில் பாரதி நான்கைந்து பாடல்களைப் பாடியுள்ளார். சிங்கார ரசம் நிறைந்த அருமையான பாடல்கள் அவை. இசை மீட்டி அருமையாகப் பாடத்தக்கவை. காதல் ரசமும் அழகியலும் மிக்கவை.

“தூண்டிப் புழுவினைப் போல் - வெளியே

சுடர் விளக்கினைப் போல்

நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடி கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை கொண்டு மிகவும் நொந்தேன் வேண்டும் பொருளையெல்லாம் - மனது வெறுத்து விட்டதடி -

என்று பாடுகிறார்.

“உணவு செல்லவில்லை - சகியே உறக்கம் கொள்ளவில்லை மணம் விரும்பவில்லை - சகியே மலர் பிடிக்கவில்லை குணமுறுதியில்லை - எதிலும் குழப்பம் வந்ததடி