பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 259

எண்ணியெண்ணிப் பார்த்தேன் - அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன் கண்ணன் திருவுருவம் - அங்ங்னே கண்ணின் முன் நின்றதடி" iുഖ് பாடி முடிக்கிறார்.

"கண்களுறங்கவொரு காரணமுண்டோ? கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார், பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான். "வெண்கல வாணிகளின் விதி முனையில் வேலிப் புறத்தில் எனைக் காணடியென்றான் கண்கள் உறங்கல் எனும் காரிய முண்டோ கண்ணனைக் கையிரண்டும் கட்டலின்றியே”

என்று மிக அருமையாகக் கவிஞர் பாடுகிறார்.

திக்குத் தெரியாத காட்டில் - உனைத் தேடித்தேடி இளைத்தேனே

என்னும் பாடலில் மிக அருமையாக இயற்கையைப் பற்றி அதில் குறிப்பாக அடர்ந்த காட்டைப் பற்றி விவரித்துப் பாடுகிறார்.

இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் அதிகமாக ஏற்பட்டுவிட்ட இக்காலத்தில் பாரதியின் இந்தப் பாடல்கள் மனதில் வலுவாக நிறுத்த வேண்டிய பாடல்களாகும். இயற்கையின் அழகையும், அமைப்பையும், அதன் அவசியத்தையும் நினைக்கும்போது நமது உள்ளம் ஆனந்தத்தால் துள்ளிக் குதிக்கிறது. அது நமது ஆரோக்கியத்தையும் கூட அதிகப்படுத்துகிறது.