பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 262

" ஆசைமுகம் மறந்து போச்சே - இதை ஆரிடம் சொல்வேனடி தோழி நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில் நினைவு முக மறக்கலாமோ?

என்றும்,

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த வையமுழுதும் இல்லை தோழி,”

எனவும்,

“கண்ணன் முகம் மறந்து போனால் - இந்தக் கண்கள் இருந்து பயன் உண்டோ வண்ணப் படமும் இல்லை கண்டாய் - இனி, வாழும் வழி என்னடி தோழி”

என்றெல்லாம் சிறந்த உவமைகளுடன் கண்ணன் பால் உள்ள

அளவற்ற அன்பை எடுத்துக் காட்டிப் பாரதி பாடுகிறார். இப்பாடல்கள்

படிப்படியாக மக்களிடம் இப்போது பிரபலமடைவதைக் காண்கிறோம்.

கண்ணன் என் காந்தன் என்னும் தலைப்பில் இன்பச்சுவையில்

மிக அருமையாகப் பாரதி பாடுகிறார்.

"கனிகள் கொண்டுதரும் கண்ணன் கற்கண்டு போல் இனிதாய் பணிசெய் சந்தனமும் - பின்னும்

பல்வகை அத்தர்களும்