பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 267

வாலைக் குமரியடி - கண்ணம்மா

மருவக் காதல் கொண்டேன்

“சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா

சாத்திரம் ஏதுக்கடி?

ஆத்திரம் கொண்டவர்க்கே - கண்ணம்மா

சாத்திர முண்டோடி

மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்பு செய்வோம்

“காத்திருப்பேனோடி - இதுபார்

கன்னத்து முத்தமொன்று”

என்று பாரதி காதலுக்கும், கண்ணன் மீதான காதலுக்கும் தனி இலக்கணம் வகுத்துக் கண்ணம்மா மீது பாடுகிறார்.

கண்ணம்மா - என் காதலி

(மற்றோரு காட்சி)

1.

"மாலைப் பொழுதில் ஒருமேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்

மூலைக்கடலினை அவ்வானவளையம்,

முத்தமிட்டே தழுவி முகிழ்தல் கண்டேன்

"நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி

நேரம் கழிவதிலும் நினைப்பின்றியே

சாலப்பலபல நற்பகற் கனவில்

தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்.