பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 268

2.

"ஆங்கு அப்பொழுதில் என்பின் புறத்திலே ஆள்வந்து நின்றெனது கண் மறைக்கவே பாங்கினிற் கையிரண்டும் தீண்டியறிந்தேன் பட்டுடை வீசு கமழ் தன்னிலறிந்தேன்

ஓங்கிவரும் உவகையூற்றிலறிந்தேன்

ஒட்டும் இரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்

வாங்கிவிடடி கையையேடி கண்ணம்மா

மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியில் அவள் கைவிலக்கியே

திருமித்தழுவி என்ன செய்தி சொல் என்றேன்

நெரித்த திரைக் கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?

பிரித்துப் பிரித்து நிதமேக மளந்தே

பெற்ற நலங்களென்னே? பேசுதி என்றாள்.

'நெரித்த திரைக் கடலில் நின்முகம் கண்டேன்,

நீலவிசும்பினிடை நின்முகம் கண்டேன்

திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்

சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன்,

பிரித்துப் பிரித்து நிதமேக மளந்தே