பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 273

கண்ணம்மா - எனது குலதெய்வம்

பாரத பூமியின் குலதெய்வம் கண்ணன். அக்கண்ண -பிரானுடைய அவதாரக் கதையும் இலக்கியமும் பாரத நாட்டு மக்களின் ஒட்டு மொத்தமான வாழ்க்கை வடிவமாகும். நமது நாட்டுமக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கண்ணன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கண்ணனுடைய அருஞ் செயல்கள் அனைத்தும் நமது வாழ்க்கையில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாரதிக்கும், கண்ணனும் கண்ணம்மா வடிவிலும் குல தெய்வமாவான். பாரதி தனது குல தெய்வமான கண்ணம்மாவிடம் சரணடைந்து விட்டான். பாஞ்சாலியும், பிரகலாதனும் கண்ணனுடைய சோதியில் கலந்ததைப் போல, ஆழ்வார்களும் பாரதியும் கண்ணனுடைய திவ்ய ஜோதியில் கலந்துவிட்டனர். அதன் ஆதர்சம் பரத மக்களை மேலும் மேலும் விழிப்படையச் செய்து முழுமையான கர்ம யோகத்தில் நம் அனைவரையும் ஈடுபடுத்துகிறது.

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா, நின்னைச் சரணடைந்தேன்!

1. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா, நின்னைச் சரணடைந்தேன்!

2. மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்

குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா, நின்னைச் சரணடைந்தேன்!

3. தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவுபெறும் வண்ணம்,