பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 27.4

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா, நின்னைச் சரணடைந்தேன்!

4. துன்பமினியில்லை சோர்வில்லை தோற்பில்லை

அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா,

நின்னைச் சரணடைந்தேன்!

5. நல்லது தீயது நாமறியோம் அன்னைநீ

நல்லது நாட்டுக! தீமையை ஒட்டுக! நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா,

நின்னைச் சரணடைந்தேன்!

என்று பாரதி தனது கண்ணன் பாடல் தொகுதியை நிறைவு செய்கிறார்.

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா, நின்னைச் சரணடைந்தேன் என்று கண்ணம்மாவிடம் முழுமையகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சரணாகதி அடைந்துவிட்டார். என்னைச் சூழ்ந்துள்ள கவலைகள் அனைத்தையும் நீக்கும்படியும், எனது நெஞ்சில் புகுந்துள்ள அடிமைப் பேய்களையும் அச்சப்பேய்களையும் நீக்கும் படியும், என் செயல்களை நீக்கி நின்செயல் செய்து என் வாழ்வை நிறைவு செய்யும் படியும், அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திடச் செய்யும் படியும் நல்லவைகளை நிலைநாட்டும் படியும் தீமைகளை ஒட்டும் படியும் கண்ணம்மாவை வணங்கி வேண்டிக் கொண்ட, மகாகவி கண்ணனைச் சரணடைகிறார். பாரதியின் இந்த அற்புதமான பாடல் சரணாகதி தத்துவத்தின் புதிய வடிவமாகும்.

நாடும் நாட்டு மக்களும் நலம் பெறவேண்டிக் கொள்ளும், அச்சமும் அடிமையும் தீரும்படி வேண்டிக் கொண்டும், அன்பு