பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 280

“வையங்காத்திடுவாய் - கண்ணா

மணிவண்ணா, என்றன் மனச்சுடரே

ஐய, நின் பதமலரே சரண்

ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி என்றாள்.

பாஞ்சாலியின் இந்த நெஞ்சுருகும் அபயக் குரலுக்குக் கண்ணன் செவிசாய்த்தான்.

“பொய்யர் தம்துயரினைப் போல் - நல்ல

புண்ணியவாளர்தம் புகழினைப் போல்

தையலர் கருணையைப் போல் - கடல்

சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்

பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்

பெருமக்கள் செல்வத்தின் பெருகுதல்போல்

கண்ணபிரான் அருளால் - தம்பி

கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய்

வண்ணப்பொற் சேலைகளாம் - அவை

வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே”

என்று பாரதி குறிப்பிடுகிறார்.

ஆழ்வார்கள் கண்ணனைப் பற்றிப் பாடியுள்ள பாடல்கள் மிகப் பெரும்பாலும் ஆயர்பாடியில் இளமைக் காலத்தில் குறிப்பாகக் குழந்தைப் பருவத்தில் நடத்திய லீலைகள், காட்டிய காட்சிகள், நடத்தி நிறைவேற்றிய அருங்செயல்கள், பின்னர் பாரதப் போரில் கண்ணன் சாதித்த அருஞ்செயல்கள், பற்றியதாகவே இருக்கின்றன. அவை

பெரும்பாலும் பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை ஆதாரப்பட்டவைகளாகவே காணப்படுகின்றன.