பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 283

கந்தார்களிற்றுக் கழல் மன்னர், கலங்கச் சங்கம் வாய் வைத்தான் என்றெல்லாம் ஆழ்வார்கள் பாடி மகிழ்ந்துள்ளார்கள்.

இவ்வாறு பாஞ்சாலியின் கூந்தல் முடிக்கவென்றும், அவளுடைய சபதத்தை நிறைவேற்றி வைக்க நூற்றுவரைக் கொல்ல வழிவகுத்தவன் என்றும் ஆழ்வார்களின் பக்திப் பாசுரங்கள் குறிப்பிடுகின்றன.

ஆயினும் பாஞ்சாலி துகில் உரியப் படும்போது, அவளுக்குத் துயில் கொடுத்து மானம் காத்த நிகழ்ச்சி பற்றி கண்ணனின் அந்த அருஞ்செயலைப் பற்றி ஆழ்வார்களின் பாடல்களில் எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. பாஞ்சாலியின் அபயக் குரலுக்குக் கண்ணன் செவி சாய்த்த விவரத்தைப் பற்றி நாலாயிரத்திவ்யப் பிரபந்தப் பகங்கள் எதிலும் காணப்படவில்லை. இது ஒரு ஆய்வுக்குரிய பெருளாகும்.

இன்னும், கண்ணனுடைய மகத்தான உலகப் பெருஞ்செயல், பாரதப் போர்க்களத்தில், போரின் தொடக்கத்தில் அவன் பர்த்தனுக்குக் கூறிய அறிவுரையாகும். அந்தத் தெய்வீக உரையாடல் புகழ்மிக்க, உலகப் பிரசித்தி பெற்ற பகவத் கீதை என்னும் தத்துவ ஞானக் களஞ்சியம் மகா வாக்கியமாகும்.

ஆழ்வார்களின் பாசுரங்களில் பகவத் கீதையைப் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. உடையவர், பகவத் கீதைக்குப் பாஷ்யம் கூறியுள்ளார். அது ரீபாஷ்யம் என்று கூறப் பட்டிருக்கிறது. இது பற்றிய குறிப்பு இராமனுஜ நூற்றந்தாதியில்

68-வது பாடலில் கூறப்பட்டுள்ளது.

"ஆரெனக் கின்று நிகர் சொல்லின்

மாயன் அன்றுஐவர் தெய்வத்

தேரினிற் செப்பிய கீதையின்